பஸ் ஸ்டாண்டிற்குள் நிற்கும் டூவீலர்கள் பஸ்கள் உள்ளே வந்து செல்வதில் சிக்கல்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் உட்பகுதி யில் பிற வாகனங்கள், டூவீலர்களை கண்டபடி நிறுத்துவதால் பஸ்களை நிறுத்தவும், வெளியே புறப்படும் போதும் தினந்தோறும் இடையூறு ஏற்படுகிறது.
ராமநாதபுரம் நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை, துாத்துக்குடி, கும்பகோணம், புதுக்கோட்டை ஆகிய வெளி மாவட்டங்கள், உள்ளூர் பகுதிகளுக்கு 300க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படு கின்றன. தினமும் பல ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர்.
பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் டூவீலர் பார்க்கிங் கட்டணம் வசூல் செப்.,1 முதல் துவங்கியுள்ளது. ஒரு டூவீலருக்கு ரூ.20 வசூலிக்கின்றனர். பிற இடங்களில் டூவீலர்களை நிறுத்த போலீசார் தடை விதித்துள்ளனர்.




