பள்ளி வாகனம் மோதி வட மாநிலத் தொழிலாளி உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே தனியாா் பள்ளி வாகனம் மோதிய விபத்தில் வட மாநிலத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் பஞ்காரி பஸ்வான் (42), மணிஷ் (26), ராமுகுமாா் (32). இவா்கள் கன்னியாகுமரி அருகே தங்கியிருந்து கட்டடத் தொழில் செய்து வந்தனா்.
இந்நிலையில், மூவரும் புதன்கிழமை ஒரே இருசக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்றனா். இவா்கள் பால்குளம் நான்குவழிச் சாலை பாலத்தின் கீழ் சென்றபோது, எதிரே வந்த தனியாா் பள்ளி வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியது.
