50 ஆண்டுகால அவதி... சுமார் 1 கிலோ மீட்டர் சாலைக்காக அலையும் எம்.செட்டிப்பட்டி மக்கள் !
M. Chettipatti Villagers' 50-Year Wait for a 1-KM Road | சாலை வசதியின்மை இவர்களின் அன்றாடப் போக்குவரத்தை மட்டுமல்ல, அவசர கால வாழ்வாதாரத்தையும் சேர்த்தே முடக்கியுள்ளது. அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் கூட ஊருக்குள் வர முடியாத சூழலே நிலவுகிறது.
சாலை வசதியின்மை இவர்களின் அன்றாடப் போக்குவரத்தை மட்டுமல்ல, அவசர கால வாழ்வாதாரத்தையும் சேர்த்தே முடக்கியுள்ளது. அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் கூட ஊருக்குள் வர முடியாத சூழலே நிலவுகிறது.
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டத்துக்குட்பட்ட எம்.செட்டிப்பட்டி கிராமத்தில் சுமார் 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகிலேயே அமைந்திருந்தாலும், இந்த வீடுகளுக்குச் செல்ல இன்றளவும் ஒரு முறையான சாலை வசதி இல்லை. அரை நூற்றாண்டாக ஒற்றையடிப் பாதையையே நம்பியிருக்கும் தகவலறிந்து நேரில் சென்று பார்வையிட்டோம்.
பெருமாள் கோவில், மாட்டுச்சந்தை, எம்.செட்டிப்பட்டி பிரிவு சாலை மற்றும் பெருமாள் கோவில் பேருந்து நிறுத்தம் என அன்றாடம் நடமாடும் முக்கிய இடங்களுக்குச் செல்ல இந்த ஒரே பாதையைத் தவிர வேறு வழியில்லை.


