தூத்துக்குடி: பாதுகாக்கப்பட்ட செம்மண் தேரிப்பகுதியில் கார்கள் சாகசம்; நடந்தது என்ன?
Car stunts in the protected 'Semman Theri' (red sand dune) area of Thoothukudi-தூத்துக்குடியில் பாதுகாக்கப்பட்ட செம்மண் தேரிப்பகுதியில் கார்கள் சாகசம்
தூத்துக்குடியில் பாதுகாக்கபட்ட செம்மண் தேரிப்பகுதிகள், தற்போது கார்களில் சகாசம் செய்யும் பகுதியாக மாறி வருகிறது. இதுகுறித்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வரும் வனத்துறையினர் மௌனம் காத்து வருவது சமூகஆர்வலர்களிடையே பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், குதிரைமொழி தேரிப் பகுதியில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சிகப்புக் கம்பளம் விரித்தாற்போல் செம்மண் மேடுகள், மணல் குன்றுகளும் நிறைந்து காணப்படுவதுதான் இந்த தேரிக்காடு. தமிழகத்தில் எங்குமே அமைந்திடாத இந்த தேரி மணல்பகுதிகளை பாதுகாத்திட வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திருச்செந்தூர், சாத்தான்குளம் பகுதியிலுள்ள தேரிக்காட்டு செம்மணலுக்கென்று பல்வேறு தனிச்சிறப்புகள் உள்ளன. இந்த தேரி மணலில் கார்னெட், இல்மனைட், இருட்டைல், சிலிக்கான், டைட்டானியம் என விலை மதிக்க முடியாத கனிம வளங்கள் கொட்டிக் கிடக்கிறது.
தனித்துவமான நிலப்பரப்பு கொண்ட குதிரைமொழி தேரி மற்றும் சாத்தான்குளம் தேரி ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று சுமார் 35கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளன. இந்த பகுதிகளிலுள்ள செம்மண் தேரி காடுகளை வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்க வனத்துறை முன் வந்துள்ள நிலையில் இங்குள்ள உயிரினங்களைப் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும்.





