மத்திய அரசு அனுமதியின்றி ரூ.52 கோடியில் புதிய கதவணை: காவிரி நீரை தேக்குவதில் திடீர் சிக்கல்
சென்னை; மத்திய அரசு அனுமதியின்றி, தமிழக நீர்வளத்துறை கட்டியுள்ள புதிய கதவணையில், காவிரி நீரை தேக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.
கர்நாடகாவில், தென்மேற்கு பருவமழை அதிகமாக கொட்டி தீர்க்கும் காலங்களில், தமிழகத்திற்கு அதிகளவில் காவிரி நீர் வருகிறது. அத்தகைய காலங்களில், காவிரியில் நீரை சேமிக்கும் அளவிற்கு, கதவணைகள், தடுப்பணைகள் போதுமான அளவில் இல்லை. மேட்டூர், முக்கொம்பு, கல்லணை ஆகிய இடங்களில் மட்டுமே நீரை தேக்க முடியும்.
இதனால், பெரும்பகுதி நீர் வீணாக கடலுக்கு செல்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, கொள்ளிடம் ஆற்றில் கதவணைகளை கட்ட வேண்டும் என, டெல்டா விவசாயிகள் வலியுறுத்தினர்.



