தி.மு.க., டவுன் பஞ்., சேர்மனுக்கு கொலை வழக்கில் ஆயுள் சிறை
திருப்பூர்: முன்விரோதம் காரணமாக, விசைத்தறி தொழிலாளி பழனிசாமி, 57, என்பவரை கார் ஏற்றி கொலை செய்த வழக்கில், தி.மு.க.,வை சேர்ந்த பேரூராட்சி தலைவர் பழனிசாமி, 60, என்பவருக்கு திருப்பூர் கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது.
திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் பேரூராட்சி, கருகம்பாளையத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளியான பழனிசாமி, கடந்தாண்டு செப்., 9ம் தேதி, டூ - வீலரில் கருகம்பாளையம் பள்ளி அருகே சென்றபோது, அவ்வழியாக சென்ற கார் அவர் மீது மோதியதில் உயிரிழந்தார்.
மங்கலம் போலீசாரின் விசாரணையில், சாமளாபுரம் பேரூராட்சி தலைவரான தி.மு.க.,வை சேர்ந்த பழனிசாமி, மதுபோதையில் காரை ஓட்டி, பழனிசாமி மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.




