"மும்பை முழுக்க குப்பைமயம்" - நாட்டின் பணக்கார மாநகராட்சியைச் சாடிய உயர்நீதிமன்றம்
மும்பை முழுவதும் ஒரே கும்பைமயமாக இருப்பதாக மும்பை மாநகராட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
மும்பை காஞ்சூர்மார்க் குப்பைக் கிடங்கில் இருந்து வரும் மாசு கலந்த காற்றால் பாதிக்கப்பட்டுள்ள கன்னம்வார் நகர் மக்கள் இது தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் கிரீஷ் குல்கர்னி மற்றும் நீலா கோகலே ஆகியோர் அடங்கிய அமர்வு மாநகராட்சியின் செயல்பாடு குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதோடு, மும்பை மாநகராட்சியிடம், "முழு நகரமும் குப்பைகளால் சூழப்பட்டுள்ளதா? குப்பை அகற்றும் நிர்வாகம் செயலிழந்துவிட்டனவா?" என்று கேள்வி எழுப்பினர்.




