ஏலச்சீட்டு நடத்தி ரூ.50 கோடி மோசடி? பெண்கள் தீக்குளிக்க முயற்சியால் பரபர
சேலம்: சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அடுத்த கட்டி-நாயக்கன்பட்டி, சவரியூரை சேர்ந்தவர்கள் காயத்ரி, 38, அமுதா, 45, ஈஸ்வரி, 39, லாவண்யா, 30, வளர்மதி, 50, ராஜாமணி, 50. இவர்கள், 6 பேரும் மனு அளிக்க நேற்று இரவு, 7:00 மணிக்கு கலெக்டர் அலுவலகம் வந்தனர். அப்போது அவர்கள், திடீரென தங்கள் மீது மண்ணெண்-ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்-றனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து மீட்டனர்.
எங்கள் ஊரை சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் முருகன் மாத ஏலச்சீட்டு நடத்தினார். அதாவது, மாதம் 5,000 ரூபாய் தொடங்கி, 20 ஆயிரம் ரூபாய் வரை பல இனங்களில் ஏலச்சீட்டு நடந்தது. அதில் இணைந்து பணம் செலுத்தி வந்தோம். கடந்த, 10 மாதங்களுக்கு முன், அவர் மார-டைப்பால் இறந்துவிட்டார். எனவே அவரது மகன்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களிடம் சீட்டு பணத்தை தரும்படி பலமுறை முறை-யிட்டும், சரிவர பதிலளிக்காமல் இழுத்தடிப்பு செய்தனர். மொத்தமாக 100க்கும் மேற்பட்டோ-ரிடம் வசூலித்த, 50 கோடி ரூபாய் வரையிலான சீட்டு பணத்தை தராமல் ஏமாற்றுகின்றனர்.பாதிக்கப்பட்டவர்கள், ஜலகண்டாபுரம் போலீசில் புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை. இந்நி-லையில், முருகனின் மனைவி தங்கம், தன்னை தாக்கிவிட்டதாக கூறி, எங்கள் மீது பொய்புகார் அளித்தார். அதன்மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி, போலீசார் எங்களை அச்சுறுத்தி வருகின்-றனர். அதனால், வேறு வழியின்றி தீக்குளிக்க முயன்றோம். எங்கள் பணத்தை மீட்டு தருவ-துடன், பொய் புகார் அளித்த தங்கத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர். சேலம் டவுன் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

