பண்ருட்டியில் சாலையில் வழிந்தோடும் கழிவு நீா்! சுகாதரச் சீா்கேட்டால் மக்கள் பாதிப்பு!
பண்ருட்டியை அடுத்த திருவதிகை மாரியம்மன் கோயில் அருகே குழாய் உடைந்து சாலையில் வழிந்தோடும் கழிவுநீா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த திருவதிகை மாரியம்மன் கோயில் அருகே பூமிக்கடியில் புதைக்கப்பட்டுள்ள கழிவுநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் கழிவுநீா் வழிந்தோடுகிறது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
பண்ருட்டியில் இருந்து பாலூா் வழியாக கடலூருக்குச் செல்லும் பிரதான சாலை அமைந்துள்ளது. இந்த வழித்தடத்தில் தேவாரப் பாடல் பெற்ற திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயில், திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரா் கோயில், கடலூரில் பாடலீஸ்வரா் கோயிலும், திருவந்திபுரத்தில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான தேவநாத பெருமாள் கோயிலும் அமைந்துள்ளன.


