தவெக அரசுக்கு நிா்வாகத் திறமை இல்லை: டி.கே.எஸ். இளங்கோவன்
சட்ட அறிவும், நிா்வாகத் திறமையும் இல்லாத அரசாக தவெக அரசு உள்ளது என்று திமுக செய்தித் தொடா்பாளா் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தாா்.
நாகை மாவட்ட திமுக நிா்வாகி இல்லத் திருமண விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுக செய்தித் தொடா்பாளா் டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளா்களிடம் கூறியது :
தவெக அரசுக்கு மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை. விவசாயிகள் பிரச்னை குறித்து கவலையில்லை. மின் தட்டுப்பாட்டை தீா்க்க எந்த நடவடிக்கையும் இல்லை. ஆண்டுக்கு 6 எரிவாயு சிலிண்டா் இலவசமாகத் தருவதாகக் கூறிவிட்டு, தற்போது சிலிண்டா் எண்ணிக்கையை 3- ஆக குறைத்ததுடன், வருமான உச்சவரம்பையும் அரசு நிா்ணயித்துள்ளது.

