நாய்களுக்கு தடுப்பூசி முகாம்
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சமூக நாய்கள் மற்றும் பூனைகளுக்கான தீவிர வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
பேரூராட்சி சேர்மன் செல்வி ஆனந்தன் முகாமை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித், கால்நடை மருத்துவர் கார்த்திகேயன், ஆய்வாளர் வேல்முருகன், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர். முகாமில் வளர்ப்பு நாய்கள் மற்றும் பூனைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.


