உள்ளாட்சி தனி அலுவலர் பதவிக்காலம் நீட்டிப்பு.. சட்டத்திருத்த முன்வடிவு பேரவையில் தாக்கல்!
28 மாவட்ட உள்ளாட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலம் அக்டோபர் 19 வரை நீட்டிப்பு செய்ய சட்டத்திருத்த முன்வடிவு பேரவையில் தாக்கல்.
28 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நியமிக்கப்பட்ட தனி அலுவலர்களின் பதவிகாலத்தை அக்டோபர் 19ம் தேதி வரை நீட்டிப்பு செய்வதற்கான சட்டத்திருத்த முன்வடிவு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களை தவிர 28 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட பதவி காலம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 5 தேதியன்று முடிவடிடைந்தது. இந்த உள்ளாட்சி அமைப்பகளுக்கு தேர்தல் நடத்தப்படவேண்டும். ஆனால் சிற்றொருதிகளின் எல்லை மறுவரையறை மற்றும் இட ஒதுக்கீடு தொடர்பான பணிகள் நிறைவு பெறாததால் தேர்தல் நடத்தமுடியவில்லை என்று சட்டமுன்வடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








