வில்லியா?.. நாயகியா? - கயாடு லோஹரின் போஸ்டரால் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
சென்னை,‘தி பாரடைஸ்’ படக்குழு நானி மற்றும் கயாடு லோஹர் இடம்பெறும் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில் கயாடு லோஹர் புகைபிடிக்கும் காட்சியில் இடம்பெற்றிருப்பது ரச
‘தி பாரடைஸ்’ படக்குழு நானி மற்றும் கயாடு லோஹர் இடம்பெறும் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில் கயாடு லோஹர் புகைபிடிக்கும் காட்சியில் இடம்பெற்றிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கன்னட திரைப்படமான ‘முகில்பேட்டை’ மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை கயாடு லோஹர், தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், அஷ்வத் மாரிமுத்து இயக்கிய ‘டிராகன்’ திரைப்படம் மூலம் அறிமுகமான இவர், முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
‘டிராகன்’ படத்தைத் தொடர்ந்து மலையாளத்தில் டொவினோ தாமஸுடன் இணைந்து நடித்த ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம் கயாடு லோஹருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. இதையடுத்து ‘இதயம் முரளி’, ‘இம்மார்டல்’, ‘ஐ அம் கேம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘தி பாரடைஸ்’, ‘மஞ்சணத்தி’ உள்ளிட்ட படங்களிலும், நடிகர் சூர்யா நடிக்கும் புதிய படம் ஒன்றிலும் கயாடு லோஹர் நடித்து வருகிறார்.


