சேந்தமங்கலத்தில் விஷம் குடித்து மூதாட்டி பலி
சேந்தமங்கலம்; சேந்தமங்கலம் கிழக்கு ஆதி திராவிடர் தெருவை சேர்ந்தவர் முத்துசாமி, 76; இவரது மனைவி நல்லம்மாள், 70. தம்பதியரின் மகன் செந்தில், நாமக்கல் மின் மயானத்தில் பணிபுரிந்து வருகிறார். முத்துசாமி, கடந்த, 45 நாட்களுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். அன்றி-லிருந்து அவருடைய மனைவி நல்லம்மாள், மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த, 3 மதியம், நல்லம்மாள் விஷம் குடித்து மயங்கி கிடப்பதாக, மகன் செந்தி-லுக்கு தகவல் வந்தது. அவரை மீட்டு சேந்தமங்-கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை பெற்ற பின், நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சேந்தமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்
