பிரதமர் மோடி - ஜின்பிங் - புடின் புகைப்படத்தில் இருக்கும் 4வது நபர் யார்? வைரலான அதிகாரியின் பின்னணி என்ன?
பிரதமரும் பிற முக்கிய அதிகாரிகளும் சீனத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது, அவர்களுக்கான அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பாளராகவும் இவர் செயல்படுகிறார்.
டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் ஆகிய மூவரும் கைகளைக் கோர்த்து நின்ற புகைப்படம் சர்வதேச அளவில் பெரும் கவனம் ஈர்த்தது. அந்த புகைப்படத்தில் தலைவர்களுடன் நின்ற நான்காவது நபரான இந்திய சித்தார்த் பாபு (Siddharth Babu) பற்றிய விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
36 வயதான சித்தார்த் பாபு, 2017-ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இந்திய வெளியுறவுத் துறை (IFS) அதிகாரி ஆவார். இவர் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்திய குடிமைப் பணிகள் தேர்வில் அகில இந்திய அளவில் 15-வது ரேங்க் பெற்று தேர்ச்சியடைந்தவர்.




