புடினுக்கு வந்த பேரதிர்ச்சி.. உக்ரைன் போரில் திடீர் திருப்பம்!
செய்தியாளர் - M. மீராரஷ்யா–உக்ரைன் போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய ராணுவத்தின் 51-ஆவது ஒருங்கிணைந்த ஆயுதப்படையின் (51st Combined Arms Army) தளப
ரஷ்யா–உக்ரைன் போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய ராணுவத்தின் 51-ஆவது ஒருங்கிணைந்த ஆயுதப்படையின் (51st Combined Arms Army) தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் செர்கெய் மில்சகோவ் (Sergei Milchakov) உயிரிழந்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி, ஆக்கிரமிக்கப்பட்ட டொனெட்ஸ்க் பகுதியில் ரஷ்ய ராணுவத்தின் கட்டளை மையங்களைக் குறிவைத்து உக்ரைன் துல்லியத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அந்தத் தாக்குதலில்தான் மில்சகோவ் கொல்லப்பட்டிருக்கலாம் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆகஸ்ட் 27-ஆம் தேதி உக்ரைன் ராணுவத்தின் பொதுப் பணியகம் இந்தத் தாக்குதலை உறுதி செய்திருந்தது. அப்போது உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, டொனெட்ஸ்க் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரஷ்ய ராணுவ கட்டளை மையங்கள் துல்லியமான தாக்குதல்கள் மூலம் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், ரஷ்ய ராணுவ அதிகாரிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள ’கடுமையான இழப்புகள்’ குறித்த தகவல்கள் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் கூறியிருந்தது.

