மத்திய அமைச்சரிடம் மனு அளித்த பரமக்குடி வியாபாரிகள் சங்கத்தினர்
பரமக்குடி: சென்னையிலிருந்து ராமேஸ்வரம் இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயிலை பரமக்குடியில் நிறுத்தம் வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க தலைவர் வேல்சங்கர், கவுரவ ஆலோசகர் ஜெயபிரகாசம், ராமநாதபுரம் மாவட்ட வர்த்தகர் சங்க தலைவர் ஜீவானந்தம், பரமக்குடி வியாபாரிகள் சங்க தலைவர் போஸ், பொதுச்செயலாளர் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில துணை தலைவர் மணிவண்ணன், பரமக்குடி மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயம் அந்துவான், பொருளாளர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.
அப்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, சென்னையிலிருந்து ராமேஸ்வரம் வரை இயக்கப்பட உள்ள வந்தேபாரத் ரயிலை பரமக்குடியில் நிறுத்த வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.



