வெயில் அதிகரித்தும் மண்பானை விற்பனை சரிவு தொழிலாளர்கள் அதிருப்தி
போடி, செப். 14 – வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும் மண்பானை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால்
வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும் மண்பானை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால் மண்பாண்ட தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் பானை உற்பத்தியை குறைத்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெப்பத்தால் ஏற்படும் சூட்டை தணிக்கை இளநீர், பழச்சாறுகள் பருக ஆர்வம் காட்டுகின்றனர். இதை தவிர குளிர்ந்த நீர் குடிக்க வீடுகள், கடைகளில் மண்பானையை பயன்படுத்தி வந்தனர். ஆண்டு தோறும் கோடை காலம் துவங்கும் முன் மண்பானை விற்பனை ஜோராக நடைபெறும். இந்தாண்டு கோடை காலம் முடிந்தாலும், வெயில் தாக்கம் முடிவிற்கு வரவில்லை. இதனால் பானை விற்பனை அதிகரிக்கும் என எண்ணி மண்பாண்ட தொழிலாளர்கள் பானைகள் அதிகம் தயாரித்தனர்.
ஆனால், பலரும் பிரிட்ஜ், ஐஸ் பெட்டிகள் வாங்க ஆர்வம் காட்டியதால் தொழிலாளர்கள் எதிர்பார்த்த அளவிற்கு பானைகள் விற்கவில்லை. மாவட்டத்தில் பெரியகுளம், போடி, ஆண்டிபட்டிபட்டி பகுதியில் உள்ள பானை உற்பத்தி செய்யும் இடங்களில் பானைகள் தேங்கியது. இதனால் மண்பாண்ட தொழிலாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். மேலும் பானை தயாரிப்பை குறைத்துள்ளதாக கவலையுடன் தெரிவித்தனர்.
