காங்., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
வால்பாறை: வால்பாறை நகர காங்., கட்சி சார்பில், மறுசீரமைப்பு திட்டம் –2 ஆலோசனைக்கூட்டம், மண்டல தலைவர்கள் தேர்வு நடைபெற்றது. கூட்டத்திற்கு கோவை தெற்கு மாவட்ட இயக்க மறுசீரமைப்பு திட்ட பார்வையாளர் முருகேஷன் தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர் சக்திவேல், வால்பாறை நகரத்தலைவர் அமீர் முன்னிலை வகித்தனர். நகர பொதுச்செயலாளர் ராமசந்திரன் வரவேற்றார்.
கட்சி நிர்வாகிகள் பேசுகையில், ‘தமிழகம் முழுவதும் காங்., கட்சியில் இளைஞர்களுக்கு பதவி வழங்கப்படவுள்ளது. பத்து பூத்களுக்கு ஒரு மண்டல தலைவர் நியமனம் செய்யப்படும். 50 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்களுக்கு தான் கட்சியில் பதவி வழங்கப்படும்,’ என்றனர்.

