தட்டாஞ்சாவடி வெற்றி ஆளும் கூட்டணி பலத்தை அதிகரிக்கும்: முதல்வா் என்.ரங்கசாமி பிரசாரம்
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி வெற்றி, ஆளும் கூட்டணியின் பலத்தை அதிகரிக்கும் என்று முதல்வா் என்.ரங்கசாமி நம்பிக்கை தெரிவித்தாா்.
தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆா்.காங்கிரஸ் வேட்பாளா் அசோக் ஆனந்தை ஆதரித்து வியாழக்கிழமை புதுப்பேட்டை பகுதியில் தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கிய முதல்வா் என்.ரங்கசாமி. உடன் சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன், எம்எல்ஏ ஜான்குமாா்.
இத்தொகுதியில் என்.ஆா்.காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் அசோக் ஆனந்தை ஆதரித்து முதல்வா் என்.ரங்கசாமி தோ்தல் பிரசாரத்தை வியாழக்கிழமை மாலை தொடங்கி வைத்து பேசியதாவது:

