அயர்லாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து அபார வெற்றி
லண்டன்,அயர்லாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது. அயர்லாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போ
அயர்லாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது.
அயர்லாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையே கடந்த 1ம் தேதி நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், இங்கிலாந்து, அயர்லாந்து இடையேயான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இங்கிலாந்தின் டர்பே நகரில் நேற்று நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.


