மகாராஷ்டிரா: கையில் குழந்தை; தோளின் மீது விழுந்த பாம்பு; அருவியில் அலறிய மக்கள்!
குடும்பத்துடன் அருவிக்கு வந்திருந்த ஒருவர், சிறு குழந்தையை கையில் தூக்கிக்கொண்டு வழுக்கலான பாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, மேலே இருந்த பாறைப் பகுதியில் இருந்து பெரிய பாம்பு ஒன்று திடீரென அவரது தோளில் விழுந்தது.
அருவியில் குளிக்கவும், இயற்கையை ரசிக்கவும் சென்ற இடத்தில் திடீரென பாம்பு ஒன்று மேலிருந்து விழுந்தால் எப்படி இருக்கும்? அதுவும் கையில் குழந்தையை வைத்திருக்கும் ஒருவரின் தோளிலேயே விழுந்தால்?
மகாராஷ்டிராவின் அம்போலி அருவியில் இப்படியொரு சம்பவம்தான் நடந்திருக்கிறது. குடும்பத்துடன் அருவிக்கு வந்திருந்த ஒருவர், சிறு குழந்தையை கையில் தூக்கிக்கொண்டு வழுக்கலான பாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, மேலே இருந்த பாறைப் பகுதியில் இருந்து பெரிய பாம்பு ஒன்று திடீரென அவரது தோளில் விழுந்தது.


