அடுத்தடுத்து வெடித்து சிதறும் NATO ஆயுதக் கிடங்குகள்! அச்சத்தில் ஐரோப்பா... பின்னணியில் யார்?
செய்தியாளர் - M.மீராNATO கூட்டணியில் இடம்பெற்றுள்ள பல்கேரியாவில் ஆயுத சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ மற்றும் வெடிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ள
பல்கேரியாவின் Tarva Levada அருகே உள்ள NATO ஆயுதக் கிடங்கில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ மற்றும் தொடர் வெடிப்புகள், உயிரிழப்புகள் ஏதுமின்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதே நிறுவனத்துடன் தொடர்புடைய மற்ற கிடங்கிலும் முன்பு வெடிப்பு நடந்தது. ரஷ்ய உளவு அமைப்புகள், உக்ரைனுக்கு ஆயுத ஏற்றுமதி செய்யும் கிடங்குகளை குறிவைத்து நாசம் செய்யப்படுகிறதா? என்ற சந்தேகம் மீண்டும் எழுந்துள்ளது.
NATO கூட்டணியில் இடம்பெற்றுள்ள பல்கேரியாவில் ஆயுத சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ மற்றும் வெடிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த சம்பவத்தின் காட்சிகள், இரவு வானமே தீப்பிழம்புகளால் ஒளிரும் அளவுக்கு பதற்றமாக இருந்துள்ளது
பல்கேரியாவின் மத்திய பகுதியில் உள்ள Tarva Levada கிராமம் அருகே இந்த ஆயுத சேமிப்பு தளத்தில் தீ ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ ஒரு கிடங்கிலிருந்து மற்றொரு கிடங்குக்கு பரவியதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து வெடிப்புகள் ஏற்பட்டபோதிலும், இதுவரை உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


