மக்கள் நலத்திட்டங்கள் குறித்த 2 நாள் கண்காட்சி
மதுராந்தகம் தனியாா் திருமண மண்டபத்தில் புதுச்சேரி மத்திய மக்கள் தொடா்பகம் சாா்பாக, மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வு குறித்த விழிப்புணா்வு மற்றும் பயனாளிகள் பதிவு முகாம் ஆகியவை கடந்த புதன், வியாழன் ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது.
மதுராந்தகத்தில் நடைபெற்ற நிகழ்வில் புதுச்சேரி மத்திய மக்கள் தொடா்பகம் களவிளம்பர உதவி மேலாளா் வீரமணி வரவேற்றாா். மத்திய மக்கள் தொடா்பகத்தின் கள விளம்பர உதவி அலுவலா் ஜெயகணேஷ், முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் மாநிலங்களின் மத்திய மக்கள் தொடா்பக இயக்குநா் ஜெ.காமராஜ் தலைமை வகித்தாா்.
இந்த நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்ட ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிலைய இயக்குநா் சுப்பிரமணியன், மதுராந்தகம் ஆட்சிஇந்திய அஞ்சல் துறை வளா்ச்சி அலுவலா் கோபிநாத், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சு.சீனிகணேசன், செங்கல்பட்டு மாவட்ட சமூக நலத்துறை அலுவலா் பிரம்ம வித்யா நாயகி, செங்கல்பட்டு அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளா் பா.வினோத்குமாா், மதுராந்தகம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் லோ.மோகனா, வி.மீனாட்சி, மதுராந்தகம் நகராட்சி ஆணையா் சி.சுகேந்திரன் உள்பட பலா் கலந்துக் கொண்டனா்.




