நின்றிருந்த சரக்கு வாகனம் மீது பைக் மோதி டிரைவர் பலி
வாழப்பாடி; பெத்தநாயக்கன்பாளையம், தும்பல் அருகே வடக்கு நாடை சேர்ந்த, குமார் மகன் சூர்யா, 23. ஆத்துாரில் உள்ள காஸ் நிறுவனத்தில் டிரைவ-ராக பணிபுரிந்தார். அதே பகுதியை சேர்ந்த, அதே நிறுவனத்தில் பணிபுரியும் தர்மனுடன், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, 'அப்பாச்சி' பைக்கில் ஹெல்மெட் அணியாமல் ஆத்துாரில் இருந்து வடக்கு நாடு சென்றுகொண்டிருந்தார்.
பனைமடல் கோழி பண்ணை அருகே சென்ற-போது, சாலையோரம் நின்றிருந்த, சரக்கு வாகனம் மீது, பைக் மோதியது. இதில் தர்மன், சூர்யா படுகாயம் அடைந்தனர். மக்கள் இருவ-ரையும் மீட்டு, பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவ
மனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சூர்யா உயிரிழந்தார். ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்-றனர்.

