விவசாய பணியில் ட்ரோன் வாயிலாக மாதம் ரூ.1.5 லட்சம் வருமானம்!
'ட்ரோன்' எனும் ஆளில்லா சிறிய விமானம் வாயிலாக வயல்களில் பூச்சி மருந்து தெளிக்கும் பணி செய்யும், புதுக்கோட்டை மாவட்டம், மணப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அமுதா:
கணவருக்கும், எனக்கும் சொந்த ஊரே மணப்பட்டி தான்; கணவர் விவசாயி. நான் பி.காம்., படித்திருந்தாலும் விவசாயம், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டேன். 2006ல், இங்குள்ள அரசு மருத்துவமனையில், நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கும் பணியில் ஒப்பந்த அடிப்படையில் சேர்ந்தேன்.
அதற்கு கூடுதல் பட்டப்படிப்பு தேவைப்பட்டதால், எம்.ஏ., சமூகவியல் படித்தேன். 2010ல் அந்த ஒப்பந்தம் முடிந்ததும், மீண்டும் விவசாயம், கால்நடை வளர்ப்பு என மாறினேன்.


