ஸ்ரீஐஸ்வர்யம் அவென்யூ திறப்பு விழா
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திராசு கிராமத்தில் மாளிகைமேடு மெயின்ரோட்டில் ஸ்ரீ ஐஸ்வர்யம் அவென்யூ புதிய நகர் திறப்பு விழா நடந்தது.
இம்மனையில், அனைத்து மனை பகுதிக்கும் தார் சாலை, ஒவ்வொரு மனைக்கும் குடிநீர் வசதி,, சோலாருடன் தெருவிளக்கு வசதி, வடிகால் வசதி, பிரமாண்டமான நுழைவு வாயில், கம்யூனிட்டி ஹால், பூங்கா உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
மனை திறப்பு விழாவிற்கு வந்தவர்களை மனை உரிமையாளர் ஆனந்தபத்மநாபன்–ஐஸ்வர்யா வரவேற்றனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம், உரக்கடை உரிமையாளர் விஜயராகவன், முன்னாள் துணை சேர்மன் விஜயரங்கன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். இதில் வள்ளி விலாஸ் உரிமையாளர் சரவணன், எஸ்.வி.அருள், சுப்ராய செட்டியார் பெண்கள் மேல்நிலைப்ள்ளி பள்ளி செயலர் மாதவன், பைனான்சியர் லட்சுமிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

