7.8% ஜிடிபி வளர்ச்சி புள்ளிவிவரங்களால் இளைஞர்களின் கண்ணீரை மறைக்க முடியாது: மாணிக்கம் தாகூர்
சென்னை,மோடி அரசு காட்டும் இந்த அதீத ஜிடிபி எண்கள் அனைத்தும் தனது படுதோல்வியை மறைக்க செயற்கையாக கட்டமைக்கப்பட்ட வெறும் போலி பிம்பங்களே என்று தமிழ்நாடு காங்கிரஸ்
மோடி அரசு காட்டும் இந்த அதீத ஜிடிபி எண்கள் அனைத்தும் தனது படுதோல்வியை மறைக்க செயற்கையாக கட்டமைக்கப்பட்ட வெறும் போலி பிம்பங்களே என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
ஜந்தர் மந்தரில் வேலை கேட்டுப் போராடும் லட்சக்கணக்கான இளைஞர்களின் கண்ணீரை, வெற்று 7.8% ஜிடிபி புள்ளிவிவரங்களால் இனி மூடி மறைக்க முடியாது. நாடாளுமன்ற உறுப்பினர் பிரவீன் சக்ரவர்த்தியின் இந்தக் கட்டுரை, பாஜக அரசின் வெற்று விளம்பரப் பொருளாதாரத்தை ஆதாரங்களுடன் தோலுரித்துக் காட்டியுள்ளது.
தொழில் முதலீட்டை பெருக்குகிறோம் என்று கூறி 2019-ல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரி வழங்கிய வரிச்சலுகையால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு மட்டுமே 100 பில்லியன் டாலர் (சுமார் ரூ.8 லட்சம் கோடி). இவ்வளவு சலுகைகள் கொடுத்தும் தனியார் நிறுவனங்கள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை; மாறாக தங்கள் லாபத்தை பதுக்கிக் கொண்டன. கடந்த பத்தாண்டுகளாக தனியார் முதலீடுகள் 14 சதவீதத்தில் இருந்து 10-12 சதவீதமாகக் குறைந்துபோயுள்ளது.



