வன விலங்குகளின் உயிர்காப்பாளரான ஏ.ஐ. தொழில்நுட்பம்
சென்னை,ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் தாக்கம் சமுதாயத்தின் அனைத்து மட்டங்களிலும் ஆழமாக வேரூன்றிவிட்டது. வனத்துறையிலும் இப்போது ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருக
ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் தாக்கம் சமுதாயத்தின் அனைத்து மட்டங்களிலும் ஆழமாக வேரூன்றிவிட்டது. வனத்துறையிலும் இப்போது ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல ரெயில் பாதைகள் வனப்பகுதிகளுக்கு நடுவே செல்கின்றன. அந்த பகுதிகளில் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் ரெயில் பாதையைக் கடக்கும்போது, சீறிப்பாய்ந்து வரும் ரெயில் மோதி உயிரிழக்க நேரிடுகின்றது.
அதிலும் குறிப்பாக, கோவையில் இருந்து கேரளாவுக்குச் செல்லும் பல ரெயில்கள் மதுக்கரையைக் கடக்கும்போது, பல வன விலங்குகள் ரெயிலில் அடிபட்டு உயிரிழக்கின்றன. மதுக்கரையில் இருந்து கேரளம் நோக்கிச் செல்லும் ரெயில்கள் பயன்படுத்துவது 'ஏ பாதை' என்றும், கேரளத்தில் இருந்து மதுக்கரைக்கு வரும் ரெயில்கள் பயன்படுத்துவது 'பி பாதை' என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பாதையில் தண்டவாளத்தைக் கடக்க முற்படும் யானைகள், சிறுத்தைகள், காட்டெருமைகள், மான்கள் போன்ற விலங்குகளைக் கண்டறிந்து, அவற்றை வேறு வழிக்குத் திருப்பும் வகையில் எச்சரிக்கை ஒலி எழுப்பும் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்ட கேமராக்கள் மற்றும் கருவிகள் மதுக்கரை வனச்சரகத்தில் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன.



