ஆன்லைனில் ஸ்ரீமத் பாகவத வகுப்புகள்
மதுரை: உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த ஆசிரமத்தில் இருந்து சுவாமி சதேவானந்த சரஸ்வதி ஆன்லைனில் தமிழில் ஸ்ரீமத் பாகவத வகுப்புகளை அக்.2 முதல் நடத்துகிறார்.
தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 20 வயதுக்கு மேல் 75 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பரிசீலனைக்கு பின், முன்பதிவு செய்வோரே வகுப்பில் பங்கேற்க முடியும். வாரத்தில் 5 நாட்கள், தினமும் ஒரு மணிநேரம் அனைத்து வகுப்புகளிலும் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.

