முதன்மை பதப்படுத்தும் நிலைய செயல்பாடு-களை கலெக்டர் ஆய்வு
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை முதன்மை பதப்படுத்தும் நிலைய செயல்பாடு-களை, கலெக்டர் தினேஷ்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு வினியோகத் தொடர் மேலாண்மை திட்டத்தில், 13.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ராயக்கோட்டை முதன்மை பதப்படுத்தும் நிலையம் நிறுவப்பட்டது. இங்கு நாள் ஒன்றுக்கு, 8 டன் அளவிலான விவசாய விளை பொருட்களை தரம் பிரித்தல், சிப்பமிடுதல், பதப்படுத்துதல் மற்றும் 220 டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்கு வசதி உள்ளது. 2020ம் ஆண்டு முதல் செயல்படத் துவங்கிய முதன்மை பதப்படுத்தும் நிலையத்தில், விவசாயிகளிடமிருந்து நேரடி-யாக, 4,152 டன் காய்கறிகள், பழங்கள் மற்றும் 1,964 டன் மக்காச்சோளம் கதிர்கள் ஆகியவை கொள்-முதல் செய்யப்பட்டு பதப்படுத்தப்பட்டுள்ளது.தற்போது, 2024 நவ., 4 முதல், 10 ஆண்டுகளுக்கு, 'கேனியோபாரத் இந்தியா' என்ற நிறுவனம், சந்தை ஒருங்கிணைப்பு பங்குதாரராக மாத வாடகை, 45,350 ரூபாய் மற்றும் 18 சதவீத ஜி.எஸ்.டி., என்ற வகையில், புரிந்துணர்வு ஒப்-பந்தம் மேற்கொண்டு ஸ்வீட் கார்ன் பதப்படுத்தப்-பட்டு, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடு-களுக்கு அனுப்பப்படுகின்றன.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

