ஆன்லைன் மோசடி: ரூ.2 லட்சத்தை இழந்த நபர் - 2 மணிநேரத்தில் மீட்டு கொடுத்த போலீசார்போலீசார்
சித்தூர், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சோமலா பகுதியில் ஆன்லைன் மோசடியில் ரூ.2.22 லட்சத்தை இழந்தவருக்கு, புகாரளித்த 2 மணி நேரத்திற்குள் பணத்தை மீட்டு தந்த போ
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சோமலா பகுதியில் ஆன்லைன் மோசடியில் ரூ.2.22 லட்சத்தை இழந்தவருக்கு, புகாரளித்த 2 மணி நேரத்திற்குள் பணத்தை மீட்டு தந்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துஷார் துடி நேரில் அழைத்து பாராட்டினார்.
இதுகுறித்து சித்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துஷார் துடி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
'சித்தூர் மாவட்டம் சோமலா பகுதியை சேர்ந்த ஒருவரின் செல்போனுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடம் இருந்து குறுஞ்செய்திவந்தது. அதில், அவரது டிராக்டருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த தகவலை அவர் பார்த்தபோது, அது போலி என்பது தெரிய வந்தது. ஆனால், சிறிது நேரத்திற்கு பிறகு அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்து 54 திருடப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
