நைனாமலை பக்தர்களுக்கு சூப்பர் வசதி! ரூ.30 கோடியில் மலைச்சாலை பணி நிறைவு
சேந்தமங்கலம், சேந்தமங்கலம் நைனாமலை கோவிலுக்கு ரூ.30 கோடியில் மலைச்சாலை அமைக்கும் பணி முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து நேற்று வாகனங்களில் பக்தர்கள் ஆர்வமாக சென்று ச
சேந்தமங்கலம் நைனாமலை கோவிலுக்கு ரூ.30 கோடியில் மலைச்சாலை அமைக்கும் பணி முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து நேற்று வாகனங்களில் பக்தர்கள் ஆர்வமாக சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பினர்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் இருந்து புதன்சந்தை செல்லும் வழியில் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் வரலாற்று புகழ்வாய்ந்த நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. அடிவாரத்தில் இருந்து சுமார் 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள அந்த மலை கோவிலுக்கு பக்தர்கள் வழக்கமாக சுமார் 2 ஆயிரத்து 500 படிக்கட்டுகளை கடந்து சென்று பெருமாள் மற்றும் குவலயவல்லி தாயாரை வணங்கிவிட்டு திரும்புவார்கள்.
மலைமேல் ஏற முடியாத பக்தர்கள் அடிவாரத்தில் உள்ள பெருமாளை வணங்கி நிற்கும் பக்த ஆஞ்சநேயரை வணங்கி விட்டு திரும்புவார்கள். இந்த நிலையில் மலைக்கோவிலில் உள்ள பெருமாளை தரிசிக்க மலைச்சாலை அமைத்து அங்கு பஸ்சில் பயணம் செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
