பாபநாசம் அருகே கூரை வீட்டில் தீ
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே ஞாயிற்றுக்கிழமை கூரை வீடு தீக்கிரையானது.
பசுபதிகோயில், மேலவீதி யில் தனியாக வசிப்பவா் கோவிந்தராஜ் மனைவி புஷ்பம் (70), இவரது மகன் மனோகரன் அருகே தனியாக வசிக்கிறாா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் மின் கசிவால் புஷ்பம் வசித்த கூரை வீட்டில் தீப்பிடித்து, வீடு எரிந்து சேதமானது. தகவலறிந்து சென்ற பாபநாசம் தீயணைப்பு துறையினா் தீ மேலும் பரவாமல் தடுத்தனா். அய்யம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.