அமோகம்!
கேரள மாநிலத்திற்கு கனிம வளங்கள் கடத்தல்... தடை இருந்தும் கண்டு கொள்ளாமல் அதிகாரிகள் ‘ஆசி’
உடுமலை: தமிழகத்திலிருந்து, பிற மாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்ல, அரசு தடை விதித்துள்ள நிலையில், உடுமலையிலிருந்து, மூணாறு ரோடு வழியாக கேரளம் மாநிலத்திற்கு கனிமங்கள் கடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கனிம வளங்களை பாதுகாக்கும் வகையிலும், உள்ளூர் தேவையை நிறைவு செய்யும் வகையில், சாதாரண கற்கள், ஜல்லி, எம்– சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை, கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்ல, கடந்த ஜூலை, 27 முதல், மூன்று மாதங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது.
தடையை மீறி கொண்டு சென்றால், கடும் நடவடிக்கையும், மாநில எல்லையோர மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகள் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.


