திருவையாறில் சூறைக்காற்று 50 ஆயிரம் வாழைகள் சேதம்
தஞ்சாவூர்: திருவையாறு அருகே, சூறைக்காற்று மழையால், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.
தஞ்சாவூர் மாவட்டம், சாத்தனுார், வடுககுடி, ஆச்சனுார், வளப்பகுடி உள்ளிட்ட பகுதிகளில், நேற்று முன்தினம் மாலை திடீரென சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால், 50 ஏக்கரில் பயிரிடப்பட்டு, அறுவடைக்கு தயாராக இருந்த, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.
விவசாயிகள் கூறுகையில், 'ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து, ஆயுத பூஜை நேரத்தில் அறுவடை செய்யும் வகையில் சாகுபடி செய்யப்பட்ட வாழை மரங்கள், சூறைக்காற்றால் முறிந்து, பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.


