இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் முக்கிய தளபதி கொலை
பெய்ரூட், இஸ்ரேலுக்குள் புகுந்து கொடூரத் தாக்குதல் நடத்திய ஹமாஸின் முக்கிய தளபதி இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். கொடூரமான தாக்குதல்மத்திய
இஸ்ரேலுக்குள் புகுந்து கொடூரத் தாக்குதல் நடத்திய ஹமாஸின் முக்கிய தளபதி இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
மத்திய கிழக்கு நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதிக்கு இடையே நீண்ட நாட்களாக போர் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி, ஒட்டு மொத்த உலகையே உலுக்கிய ஒரு பயங்கர சம்பவத்தை காசாவின் ஹமாஸ் அமைப்பினர் அரங்கேற்றினர்.
இஸ்ரேல் எல்லைக்குள் அத்துமீறிப் புகுந்த அவர்கள், அங்குள்ள சுக்பா ராணுவ முகாம் மீது கொடூரமான தாக்குதலைத் தொடுத்து, நூற்றுக்கணக்கான பொதுமக்களைக் கொன்று குவித்ததுடன், ஏராளமானோரைப் பிணைக் கைதிகளாகவும் கடத்திச் சென்றனர். இந்த கொடூரத் தாக்குதலுக்குக் காரணமான ஒவ்வொருவரையும் வேட்டையாடுவோம் என இஸ்ரேல் ராணுவம் சபதம் ஏற்றிருந்தது.

