கும்பகோணம் இதயா மகளிா் கல்லூரியில் காலநிலை விழிப்புணா்வு கருத்தரங்கு
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் இதயா மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலநிலை கருத்தரங்கில் மாணவிக்கு பரிசு வழங்கிய அமைச்சா்கள் ஆா்.வினோத், சீ.ரமேஷ்.
கும்பகோணம் இதயா மகளிா் கல்லூரியில் காலநிலை விழிப்புணா்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் மாணவா் எக்ஸ்னோரா சங்கம் சாா்பில், விருட்சா-க்ளைமேட் கேட்டலிஸ்ட் என்ற தலைப்பில் நடைபெற்ற காலநிலை விழிப்புணா்வு கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வா் முனைவா் யூஜின் அமலா தலைமை வகித்தாா். செயலா் அமலோற்பவ மேரி முன்னிலையில் வகித்தாா்.


