இரு பெரும் கட்சிகள் கடைப்பிடிக்கும் சமூக நீதி!
என்.ராமையா, சென்னையில் இருந்து அனுப்பிய, இ - மெயில் கடிதம்: சேலம் மாநகராட்சி தி.மு.க., மேயர்
என்.ராமையா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
சேலம் மாநகராட்சி தி.மு.க., மேயர் ராமச்சந்திரன், 'காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துணை மேயர் சாரதா தேவியின் இருக்கையை கீழே இறக்கினால் தான், மன்றத்தை நடத்துவேன்' என்று கூறியுள்ளார். அதற்கு துணை மேயர் எதிர்ப்பு தெரிவிக்கவே, அவரை இரண்டு மாதத்திற்கு இடை நீக்கம் செய்ததுடன், கூட்டத்தை தொடர்ந்து நடத்தாமல், கூட்டம் முடிந்ததாக கூறி புறப்பட்டு சென்றுள்ளார், ராமச்சந்திரன்.
இதைக் கண்டித்து, 'ராமச்சந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளாராம், சென்னை மாநகராட்சி காங்., கவுன்சிலர் ராஜசேகரன்.


