ஓட்டை மாத்தி போடுறாங்க!
மதுரை, ஒத்தக்கடையில் நாம் தமிழர் கட்சி சார்பில், சமீபத்தில் பொதுக்கூட்டம் நடந்தது.
இதில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், 'சில ஆண்டுகளுக்கு முன், அமெரிக்கா சென்றிருந்த என்னிடம், அங்கிருந்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 'பாஸ்' என்று தான் என்னை அவர்கள் அழைத்தனர்; உன்னை எப்படி உன் நாட்டில் உயிரோடு விட்டுள்ளனர் என்று கேட்டனர்.
'நாம் தமிழர் கட்சியின் கொள்கை என்ன என்று கேட்டனர்; சொன்னால், என் கட்சியில் சேர்ந்து விடுவீர்களா என்று கேட்டேன்; சிரித்து விட்டனர்' என்றார்.


