சிலை கடத்தல் மன்னனை ஜெர்மனிக்கு அனுப்ப உத்தரவு
மதுரை: தண்டனை காலம் முடிந்ததும், சிறையிலுள்ள சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்சந்திர கபூரை, ஜெர்மனிக்கு அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
அரியலுார் மாவட்டம், உடையார்பாளையம் அருகே, சுத்தமல்லி வரதராஜ பெருமாள் கோவிலில், தொன்மையான சிலைகள் திருட்டு மற்றும் கடத்தல் வழக்கில், சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றம், 2022 நவ., 1ல் உத்தரவிட்டது. அவர், திருச்சி மத்திய சிறையில் உள்ளார்.
சுபாஷ்சந்திர கபூர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:



