'குடி'மகன்களுக்கு குட் நியூஸ்: டாஸ்மாக் கடையில் விரைவில் 25 புது ரகம் அறிமுகம்!
சென்னை, 'டாஸ்மாக்' கடைகளில், 25 புதிய மது வகைகள் விற்பனைக்கு வர உள்ளன. அவற்றுக்கு விலை நிர்ணயம் செய்ய, மதுபான நிறுவனங்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சு இறுதி கட்
'டாஸ்மாக்' கடைகளில், 25 புதிய மது வகைகள் விற்பனைக்கு வர உள்ளன. அவற்றுக்கு விலை நிர்ணயம் செய்ய, மதுபான நிறுவனங்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 11 மதுபான ஆலைகளிடம் இருந்து மது வகைகள், ஏழு ஆலைகளிடம் இருந்து பீர் வகைகள், ஒரு ஆலை யிடம் இருந்து ஒயின் கொள்முதல் செய்கிறது.
தமிழகத்தில் தயாரிக்கப்படும், 174 மது வகைகள், 40 பீர் வகைகள், நான்கு ஒயின்கள் மற்றும் பிற மாநில மதுபானங்களில் ஆறு மது வகைகள், ஐந்து பீர், ஐந்து ஓயின்கள் விற்கப்படுகின்றன. மேலும், 538 மது வகைகளை டாஸ்மாக் இறக் குமதி செய்து, வணிக வளாகங்களில் உள்ள மது கடைகளில் விற்கிறது.



