கோவையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை - 3 பெண்கள் உட்பட 6 பேர் கைது
கோயம்புத்தூர்,தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தததில் 3 பெண்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். லாட்டரி சீட்டு விற்பனைகோயம்புத்தூர்
தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தததில் 3 பெண்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை பாரதி நகரை சேர்ந்தவர் கவுதம் ( வயது 34). இவர் கேரள மாநிலம் மீனாட்சிபுரம் பகுதியில் லாட்டரி சீட்டு கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகள் பதுக்கி வைத்து, வாட்ஸ்-அப் செயலி மூலம் விற்பனை செய்து வருவதாக கோவை மாவட்ட எஸ்.பி. பவன்குமார் ரெட்டிக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில் ஆனைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் தலைமையில் சப் - இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் மற்றும் போலீசார்கள் இணைந்து கவுதம் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நடத்தப்பட்ட சோதனையில் அங்கு 5,900 கேரள மாநிலம் லாட்டரி சீட்டுகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடித்து, அவற்றை பறிமுதல் செய்தனர்.



