7.9.1976: செவ்வாயில் பூகம்பம் உண்டா? வைக்கிங்-2 விண்கலம் ஆய்வு
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.
பாசதேனா, கலிபோர்னியா, செப். 6- செவ்வாய் கிரஹத்தில் 'உடோபியா' பகுதியில் வெற்றிகரமாக இறங்கியுள்ள வைக்கிங்-2 அமெரிக்க விண்கலம் அங்கு அதிர்ச்சிகள் உண்டா என்பதை ஆராயத் துவங்கியுள்ளது . இதற்காக செவ்வாய் பாறை சரிவுகள் பற்றி ஆராய்ச்சி நடத்துகிறது.
வைக்கிங்-2 பாறையின் மீது நெங்கியதாலும், வைக்கிங்-1ல் உள்ள அதிர்வு பதிவு மானி இயங்கத் தவறியதாலும் வைக்கிங்-2ன் அதிர்வு பதிவு மானி பற்றி விஞ்ஞானிகள் கவலை கொண்டிருந்தனர். ஆனால், வைக்கிங்-2ல் உள்ள இக்கருவி எதிர்பார்த்தது போல் நன்கு செயல்படுவதாக தகவல் கிடைத்துள்ளது என்று வைக்கிங் திட்ட குழு அங்கத்தினர்களில் ஒருவரான டாக்டர் லதாம் தெரிவித்தார்.
