கரிசல் மண்ணிலும் விளையும் சிவன் சம்பா ரக நெல்
கரிசல் மண்ணில், சிவன் சம்பா ரக நெல் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த, எடையூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வி.உதயகுமார் கூறியதாவது:
செம்மண்ணும், களிமண்ணும் கலந்த கரிசல் மண் நிலத்தில், சிவன் சம்பா ரக நெல் சாகுபடி செய்துள்ளேன். இந்த ரக நெல், 120 நாட்களுக்கு பின் அறுவடை செய்யலாம். ஒரு சில இடங்களில், சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப மாறுபடும்.
பாரம்பரிய ரக நெல்லை, ரசாயன உரங்கள் இன்றி, இயற்கை உரங்களை போட்டு சாகுபடி செய்து வருகிறேன். இந்த நெல்லை அரிசியாக்கி மதிப்பு கூட்டி விற்கும் போது, கணிசமான வருவாய் ஈட்ட முடியும்.

