"தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்?" - செக்கோவ்வின் வரிகளை நினைவூட்டிய சிந்தனைச் செல்வன்
விசிகவின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்திருக்கிறது.| vck sinthanai selvan twitter post about Anton Chekhov
"சிந்தனையோடும் கரிசனையோடும் உதிர்க்கப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிராக, தீவிரமானதும் முட்டாள்தனமானதுமான ஆயிரம் சொற்கள் உதிர்க்கப்படும்" - சிந்தனைச் செல்வன்.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற விசிக, தேர்தலுக்குப் பின்னர் தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்து தற்போது அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் விசிகவின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்திருக்கிறது.


