“ஒருநாள் கிரிக்கெட்டில் நான் பார்த்ததிலேயே சிறந்த வீரர் கோலி” - மேக்ஸ்வெல் புகழாரம்
மெல்போர்ன்,ஒருநாள் கிரிக்கெட்டில் தான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த வீரர் விராட் கோலி என்று ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் புகழாரம் சூட்ட
அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் எக்காலத்திற்குமான சிறந்த வீரர்கள் குறித்து பேசிய மேக்ஸ்வெல், ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலியை தேர்வு செய்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் ஒருநாள் கிரிக்கெட்டில் பார்த்த மிகச்சிறந்த வீரர் கோலிதான். எங்களுக்கு எதிராக அவர் விளையாடிய சில இன்னிங்ஸ்கள் நம்பமுடியாதவை. மைதானத்தில் தான் விரும்பும் இடத்திற்கு பந்தை அவரால் அடிக்க முடியும். அவர் உண்மையிலேயே வேற லெவல்” என்று தெரிவித்தார்.
விராட் கோலி இதுவரை 314 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 58.59 சராசரியுடன் 54 சதங்கள், 79 அரைசதங்கள் உள்பட 14,941 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பேட்டர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

