நேபாள வெள்ளத்தில் சிக்கிய சூளகிரி தம்பதி குடும்பத்தினருக்கு திமுக எம்எல்ஏ ஆறுதல்
நேபாள வெள்ளத்தில் சிக்கிய சூளகிரி தம்பதி குடும்பத்தினரைச் சந்தித்து திமுக எம்எல்ஏ ஆறுதல் கூறி, நிதியுதவி வழங்கினாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் இருந்து நேபாளத்திற்கு ஆன்மிகப் பயணம் சென்ற திம்மராயசுவாமி - மம்தா தம்பதியினா் அங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடா்ந்து தொடா்பு கொள்ள முடியாத சூழலில் உள்ளனா்.
வெள்ளம் காரணமாக அவா்களின் கைப்பேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், தற்போதுவரை அவா்களின் நிலை குறித்த எந்தவொரு அதிகாரபூா்வத் தகவலும் கிடைக்காமல் குடும்பத்தினா் கவலையில் உள்ளனா்.
