திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் தேசிகர் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்
கடலூர், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் தேசிகர் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். தேசிகர் பிரம்மோற்ச
திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் தேசிகர் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் 108 வைணவ தலங்களில் சிறப்பு வாய்ந்ததாகும். இக்கோவிலில் பிரசித்தி பெற்ற தேசிகர் சன்னதி உள்ளது. இங்கு வருடந்தோறும் தேசிகர் பிரம்மோற்சவ விழா 12 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டின் பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கியது.
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று பெருமாள், தாயார் மற்றும் தேசிகருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பெருமாள் மற்றும் தாயார் சிறப்பு அலங்காரத்தில் கண்ணாடி அறை உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

