பாதியில் நிறுத்தப்பட்ட பாலம் பணி தனித்தீவாகும் குடியிருப்புகள்
உடுமலை: உடுமலை வி.ஜி., ராவ் நகர் பாலம் கட்டுமான பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பாதித்து வருகின்றனர்.
உடுமலை திருப்பூர் ரோடு, வி.ஜி.,ராவ் நகர், யு.கே.சி.,நகர் உள்ளிட்ட குடியிருப்புகளில், ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இக்குடியிருப்புகளுக்கு, திருப்பூர் ரோட்டிலிருந்து செல்லும் ரோட்டின் குறுக்கே ஓடை உள்ளது.
இந்த ஓடையை கடக்க, ஏற்கனவே இருந்த பாலம் சிதிலமடைந்தும், குறுகியதாகவும் இருந்ததால், அப்பாலம் அகற்றப்பட்டு, புதிய பாலம் கட்டுமான பணி துவங்கியது.


